"நாட்டில் சராசரியாக 6.5 சதவீத கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன" -மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் வருத்தம்
நாட்டில் சராசரியாக ஆறரை சதவீத கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அதிக அளவிலான கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன என்றார்.
தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை வெகுவாக குறைக்க வேண்டும் என்றும் அவ்வாறு குறைந்தால், அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது அர்த்தம் என்றும் கூறினார்.
Comments